தமிழகம்

16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன்..! திடீரென வந்த கடிதம்.! சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த தாய்!

Summary:

Thanjavur variselvan

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகமுத்து - வளர்மதி தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் வெற்றிச்செல்வன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்றுள்ளான். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சில நாட்கள் கழித்து நாகமுத்துவும் இறந்துள்ளார்.

நாட்கள் நகரவே மகனை தேடி அழைத்து போன தாய் மற்றும் உறவினர்கள் மகன் இறந்து விட்டதாக நினைத்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் 16 ஆண்டுகள் கழித்து வளர்மதிக்கு கடிதம் வந்துள்ளது.

அதில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தனது தாயை காண வேண்டும், அதற்கு தங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று கடிதம் ஒன்றை வெற்றிச்செல்வன் கொடுத்துள்ளார். 16 ஆண்டுகள் கடந்ததால் இறந்து விட்டான் என நினைத்த மகன் உயிருடன் இருப்பதை கேட்டது சந்தோசமடைந்துள்ளார் வளர்மதி.

உடனே வெற்றிசெல்வனின் சித்தப்பா சென்று மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வந்ததும் வெற்றி செல்வன் தனது தாயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருவரும் கட்டியணைத்து கண்ணீர் விட்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. 


Advertisement