என் அத்தை மகளை நீ காதலிக்காதே... மாணவிக்காக காதலன் படுகொலை.. தஞ்சாவூர் அருகே பதற்றம்.!thanjavur-near-area-youngster-murder-due-to-love-issue

12 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்த இளைஞர், மாணவியின் அத்தை மகனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் - மன்னார்குடி சாலை, வாளமர்கோட்டை கிராமத்தில் உள்ள வாண்டையார் தெருவில் வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன். இவரின் மகன் ஆனந்த் (வயது 21). இவர் ஐ.டி.ஐ பயின்று வருகிறார். இதே பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தெரியவருகிறது. மாணவியின் அத்தை மகன் சூரக்கோட்டை உதயகுமார் (வயது 25). மாணவியின் காதல் விவகாரத்தை அறிந்த அவரின் அத்தை மகன் உதயகுமார் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று இரவில் வாளமர்கோட்டை குளக்கரை பகுதியில் ஆனந்த் நின்று கொண்டு இருந்த நிலையில், உதயகுமார் அங்கு சென்று தகராறு செய்துள்ளார். குறிப்பிட்ட மாணவி எனது அத்தை மகள் என்பதால், அவளை நீ காதலிக்க கூடாது என ஆனந்தை உதயகுமார் மிரட்டி இருக்கிறார். 

thanjavur

அப்போது, இவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், உதயகுமார் கீழே இருந்த கட்டையை எடுத்து ஆனந்தை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டி தப்பி சென்றுள்ளார். பலத்த இரத்த காயத்துடன் கிடந்த ஆனந்தை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்ட ஆனந்த், சிறிது நேரத்திற்குள்ளாகவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தஞ்சாவூர் காவல் துறையினர் உதயகுமாரை தேடி வருகின்றனர். மேலும், நிகழ்விடத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால், காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.