தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.வின் தாயார் காலமானார்.! உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!

தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.வின் தாயார் காலமானார்.! உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!


thangam-thennarasu-mom-passed-away-4ZTUGP

முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம்தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான ராஜாமணி அம்மாள் நேற்று மாலை காலமானார். 

ராஜாமணி அம்மாளுக்கு வயது 84. இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு விருதுநகர் அருகே உள்ள சொந்த ஊரான மல்லாங்கிணறுக்கு திரும்பினார். இதையடுத்து மாலை 6.45 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் காலமானார்.

அவரது மரணம் குறித்து தகவலறிந்த திமுகவினர் மற்றும் அந்த கிராமத்து பொதுமக்கள், தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அண்ணன் தங்கம் தென்னரசு மற்றும் தென் சென்னை மக்களவை உறுப்பினர் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன்ஆகியோரின் தாயார் ராஜாமணி தங்கபாண்டியன் அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அண்ணன்-அக்கா உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.