புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நகைச்சுவை பாணியில் நாயை மடக்கிய நபர்; வேட்டியை பாய்ந்து கவ்விய நாய்.. நூலிழையில் தப்பிய உயிர்நாடி.!
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், அதிக குறும்புத்தன்மை கொண்டவை ஆகும். எப்போதும் நம்முடன் அன்புடன் விளையாடுபவை, சில நேரம் வீட்டில் இருக்கும் போர்வை, தலைகாணி ஆகியவற்றை பிரித்து மேய்ந்துவிடும்.
ஏனெனில் அவற்றின் குறும்புத் தனத்திற்குள் இருக்கும் ஆக்ரோஷம் அப்படி அதனை செய்ய தூண்டும். பெரும்பாலும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மக்களுடன் மக்களாக இருக்கும்.
இதையும் படிங்க: தென்காசி: காதல் திருமணம் அன்பான கணவன் இருந்தும் கசந்தது.. சகோதரனின் ஆணவ வெறியால் அப்பாவி பலி.!
எனினும், அவை ஒருசில நேரம், அதாவது ஏதேனும் நபர் தன்னிடம் வம்பிழுப்பதைப்போலத் தோன்றினால் மூர்க்கத்துடன் எதிர்கொள்ளும் துணிவும் கொண்டவை ஆகும். ஆகையால், தெருநாய் தானே என அலட்சியமாக செயல்படுவோர் கவனத்துடன் இருப்பது நல்லது.
வீடியோவை காண இங்கு அழுத்தவும்: https://www.facebook.com/watch/?v=1463457757650995
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியில் தெருநாய் ஒன்று வீதியில் நடந்து வந்துகொண்டு இருந்தது. அச்சமயம் அங்கு வந்த நபர் ஒருவர், அதனை மடக்கி பிடிக்க முயற்சித்தார்.
அப்போது திடீரென ஆவேசமடைந்த நாய், அவர் உடுத்தியிருந்த வேட்டியை பாய்ந்து கவ்வியது. இதனால் பதறிப்போனவர் சாதுர்யமாக நாயை விரட்டியதால் உயிர்நாடியில் அல்லது தொடையில் காயமின்றி உயிர்தப்பினார்.
இந்த விஷயம் குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வடிவேலு காமெடி ஒன்றில், சும்மா இருந்த நாயை விரட்டிவிட்டுச் செல்லுமாறு மூதாட்டி கூறுவார். நாயை விரட்டியதும் அது வடிவேலுவை கவ்விப்பிடிக்கும். அதைப்போன்ற சம்பவமாக மேற்கூறியது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தந்தை உயிரிழப்பால் வேதனை: மகனும் வருத்தத்தில் விபரீதம்.!