ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"ஓசி டீ தராததால் ஆத்திரம்... " மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு.!! மர்ம நபர்கள் வெறி செயல்.!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓசி டீ தர மறுத்ததால் டீ மாஸ்டர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டவ குப்பம் அருகே முருகன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று இவரது டீ கடைக்கு வந்த மர்ம நபர்கள் தேநீர் கேட்டுள்ளனர். அப்போது டீக்கடையின் உரிமையாளர் காசு கேட்டிருக்கிறார். ஆனால் டீ குடிக்க வந்தவர்கள் தங்களுக்கு இலவசமாக தர வேண்டும் எனக் கூறி பிரச்சனை செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த டீ மாஸ்டரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தங்கள் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களது மோட்டார் பைக்கை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலை எங்கே...? தோப்பில் கிடந்த சடலம்.!! காவல் துறை தீவிர விசாரணை.!!