தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்கள் தவிர டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி.!

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்கள் தவிர டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி.!



tasmac-will-open-in-tamilnadu

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமெடுத்து வந்ததால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்துவந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

tasmac

இதில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களாக டாஸ்மாக் பூட்டப்பட்ட நிலையில், திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.