இனிமேல் டாஸ்மாக் கடை மாலை 4 வரை மட்டுமே செயல்படும்! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதிரடி!

இனிமேல் டாஸ்மாக் கடை மாலை 4 வரை மட்டுமே செயல்படும்! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதிரடி!



tasmac-will-closed-at-4-pm-in-thanjavur

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 75 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே தீவிரமாக பரவி வந்த இந்த கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் தீவிரமடைந்து வருகிறது. 

corona

இதை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், தஞ்சாவூர் மவாட்டத்தில்  கொரோனாவை கட்டுப்படுத்த டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் உட்பட அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும்  என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். இதே போல மற்ற மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.