போதும் சாமி..! பெருமூச்சுடன் மதுபிரியர்கள்.! போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை துவங்கியது.!

போதும் சாமி..! பெருமூச்சுடன் மதுபிரியர்கள்.! போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை துவங்கியது.!


tasmac-opened-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. ஊரடங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டநிலையில், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டநிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை துவங்கியுள்ளது.

tasmacமது வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும். முக முகவசம் அணியாமல் வருபவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட மாட்டாது. மதுக்கடைகள் முன்பும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் உதவி செய்வார்கள். கூட்டம் சேர்க்காமல் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் வாங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடையில் மது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நீண்ட நாட்களாக  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பெருமூச்சு விட்டு சந்தோஷத்தில் மது வாங்கி செல்கின்றனர் மதுபிரியர்கள்.