தமிழகம்

டாஸ்மாக் விற்பனை நேரம் அறிவிப்பு..! எந்த வயதினருக்கு எப்போது மது விற்பனை..! முழு விவரம் இதோ..!

Summary:

Tamilnadu Tasmac timing for age limit

மூன்றாம்கட்ட ஊரடங்கு தளர்வில் மத்திய அரசு அனுமதித்ததை அடுத்து கடந்த திங்கள் முதல் இந்தியாவில் பலமாநிலங்களில் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பதுகுறித்து அமைதிகாத்துவந்த தமிழக அரசு வரும் மே 7 முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மதுக்கடைகள் நிபந்தனையுடன் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், எந்தெந்த வயதினருக்கு எந்தெந்த நேரத்தில் மதுவிற்பனை செய்யப்பட்ட வேண்டும் என்ற உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement