பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி!



tamilnadu-students-happy-for-minister-sengottaiyan-anno


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்களிடம் பேட்டி அளித்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, பல பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கே தமிழகம் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது.

sengottaiyan

6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 7,000 ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதியுடன்கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் எனவும், 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதைபயன்படுத்தி மாணவர்கள் தங்கள் மடிகணினி மூலமாகவே படித்துக்கொள்ளலாம் எனதெரிவித்தார்.

உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது. அதற்கு பள்ளிகல்வி துறை மூலமாக வழங்கப்பட்ட சலுகைகள் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், 2019 -20 கல்வியாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.