இனி ஆன்லைனில் பதியப்படும் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு.. வச்சாங்க பாரு ஆப்பு..! 



tamilnadu-state-dpi-announce-register-attendance-online

தமிழ்நாட்டில் இனி அனைத்து பள்ளிகளிலும், ஆன்லைன் ஆப் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வருகை பதிவேடுகளை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை மிக எளிமையாக பதிவு செய்யவே இந்த ஆன்லைன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆப் பெயர் TNSED School என்ற ஆப் மூலம் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ளலாம்.

tamilnadu

இந்த ஆப் ஆப் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்து, இரண்டு மாத காலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வருகையை பதிவு செய்து வருகின்றனர்.

இதை தற்போது தமிழ்நாட்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2023 ஜனவரி 1 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய வருகையை செயலியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.