தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் ஆரம்பமாகிறது... தங்கள் குழந்தைகளின் நலம் காக்க கட்டாயம் இதை செய்யுங்கள்..

Summary:

Tamilnadu government gave vitmain A medician today onwards

தமிழகத்தில் இன்று முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மருந்தானது மருத்துவ முகாம்களில் வழங்கப்பட உள்ளது. இந்த விட்டமின் ஏ மருந்தானது குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் அறிவுசார் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

மேலும் இன்று துவங்கும் இந்த முகாமானது வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு  நாட்கள் நடத்தப்பட உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் அங்கன்வாடி மைங்களில், செவ்வாய், புதன் மற்றும் ஞாயிறு தவிர்த்து, பிற நாட்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நலன் காக்க உடனே இம்மருந்தை பெற்று பயன்பெறுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. 


Advertisement