அரசியல் தமிழகம் இந்தியா

ஹைட்ரோகார்பன் திட்டம்! டெல்டா மக்களுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Summary:

tamilnadu CM wrote letter to PM


ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதேபோல் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது இதுவரை இருந்து வந்த விதிமுறை ஆகும்.

ஆனால் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ மக்களின் கருத்தோ கேட்க தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் பிரச்னை சம்பந்தமாக பிரதமர் மோடிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் மக்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் டெல்டா பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement