கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் இதனை கடைபிடியுங்கள்! முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் இதனை கடைபிடியுங்கள்! முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!


tamilnadu CM request for Coronavirus

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தவிர்க்க வேண்டும். தமிழக எல்லைகளில் உள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, விருதுநகர், ராணிப்பேட்டை, ஈரோடு, தேனி உள்பட 16 மாவட்டங்களில் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31- ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

corona

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்.கே.ஜி-யு.கே.ஜி.), தொடக்கப்பள்ளிகளுக்கும் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) 31-3-2020 வரை விடுமுறை அளிக்கவும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் வீட்டிற்குள் நுழையும் போது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனே அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.