தமிழகம் Covid-19

முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவுக்கு பலி!

Summary:

Tamilnadu cm office personal secretary died

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிகமான பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழகம். குறிப்பாக தமிழகத்திலே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் தமிழக முதல்வர் அலுவலகத்தில் தனிச்செயலாளராக பணிபுரிந்து வந்த தாமோதரன் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். சமீபத்தில் திமுக எம்எல் ஏ ஜெ.அன்பழகன் கொரோனவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிச்செயலாளர் உடன் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


Advertisement