
tamilnadu - jallikattu - pongal pestivel
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 2 லட்சம் வரை வழங்கும் புதிய திட்டம் இவ்வாண்டு முதல் அறிமுகமாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதை தொடர்ந்து தற்சமயம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் காளைகள் வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகின்றனர்.
இவர்களை மேலும் உற்சாகமூட்டி ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தின் கீழ் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூபாய் 2 லட்சம் வரை இழப்பீடு வழங்கும் புதிய திட்டம் இவ்வாண்டு முதல் அறிமுகமாகியுள்ளது.
மதுரை மாவட்டமான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் முதன்முதலாக இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளது.
போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் ரூபாய் 12 டெபாசிட் தொகையாக செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு தற்சமயம் பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் மாடுபிடி வீரர்கள் அனைவரும் மிகவும் உற்சாகம் அடைந்து பொங்கலை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
Advertisement
Advertisement