"ஜாலியா இருப்போமா கண்ணுங்களா... " மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... தமிழ் பேராசிரியர் கைது.!!



tamil-professor-arrested-for-sexual-abuse-against-stude

திருச்சி மாவட்டத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் உறவுக்கு வலை வீசிய பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகமும் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. நாகராஜ் என்பவர் இந்த கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது. இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையிடமும் புகாரளித்தது.

tamilnadu

இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பேராசிரியர் நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகளுக்கு தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: 13 வயது சிறுமி கட்டாய திருமணம்... பாலியல் தொல்லை.!! 47 வயது நபர் மீது போக்சோ வழக்கு.!!

குற்றம் சுமத்தப்பட்ட பேராசிரியர் இதற்கும் முன்பும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இது தொடர்பான உண்மைகளை கல்லூரி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்.!! பிசியோதெரபிஸ்ட் கைது.!!