தமிழகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்!! வரும் 6 ஆம் தேதி முதல் இதெற்கெல்லாம் முற்றிலும் கட்டுப்பாடு!!

வரும் 6ம் தேதி முதல் பல்வேறு நடைமுறைகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு இந்த தடை உத்தரவை விதித்துள்ளது. அதன் முழு விவரம் இதோ.
மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும், 6ம் தேதி முதல், திறக்க தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ரயில், பேருந்து, கால் டாக்சி போன்ற பொதுவான போக்குவரத்துக்கு சாதனங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் மக்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும்.
மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் செயல்படலாம். அனைத்து உணவகங்களிலும் மக்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை மட்டுமே செயல்படலாம். இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை
சனிக் கிழமைகளில் மீன் மார்க்கெட், கோழி இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.