தமிழகம் Covid-19

நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சு!! தயவு செய்து வீட்டிலையே இருங்க!! தமிழகத்தில் உச்சம் தொட்ட பாதிப்பு மற்றும் பலி

Summary:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ற

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,579 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 35,579 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் மேலும் சோகமான தகவல் என்னவென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்றும் மட்டும் 25, 368 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,52,283 ஆக உயர்ந்தது.

இந்தியளவில் அதிக கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


Advertisement