தூள் கிளப்பும் CM விஜய்யின் ஆட்டம்! 100 க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! நள்ளிரவில் வெளியான அரசாணையால் அதிர்ந்துப்போன அதிகாரிகள்..!!!



tamil-nadu-government-major-transfer-orders-officials

தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் நோக்கில், பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரிகளுக்கு விரிவான பணியிடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட பலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பல துறைகளில் முக்கிய அதிகாரிகள் மாற்றம்

ஆளுநரின் உத்தரவின்படி தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்ட அரசாணையின்படி, சிப்காட் பொது மேலாளராக இருந்த எல். மைதிலி, சென்னை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலாளராக இருந்த ஆர். பாலசுப்பிரமணியன் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், நகர்ப்புற வாழ்விட அபிவிருத்தி வாரியச் செயலாளர் எஸ். வெங்கடேஷ் மின்-ஆளுமை இயக்குநரக இணை இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக அரசுப் பள்ளிகளில் 1,600 க்கும் மேல் புதிய வேலைவாய்ப்புகள்....! அரசாணையின் முக்கிய அறிவிப்பு..!!!

மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரக இணை ஆணையராக இருந்த சி. அஜய் சீனிவாசன் சென்னை பயிற்சி தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பணியாற்றிய கே. காயத்ரி சுப்ரமணி மதுவிலக்குத் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய பொறுப்புகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட உத்தரவுகள்

நகராட்சி நிர்வாக ஆணையரக இணை ஆணையராக இருந்த டி. அழகர்சாமி, நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தைச் சேர்ந்த எஸ். வள்ளி நகராட்சி நிர்வாக ஆணையரக இணை ஆணையராகவும், விடுப்பிலிருந்து திரும்பிய எம்.ஆர். கண்ணகி மனிதவள மேலாண்மைத் துறை ஆய்வாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும், டாக்டர் பி. முருகேசன் கூடலூர் ஜன்மம் நிலங்களின் தீர்வு அலுவலராகவும், பி. குமாரேஸ்வரன் கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் சிறப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனுடன், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த முந்தைய இடமாற்ற உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வாரியங்களுக்கும் சேவைகள் ஒப்படைப்பு

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் பணியாற்றிய டாக்டர் பி.எம். செந்தில்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியச் செயலாளராகவும், வி. லதா அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் நிர்வாகப் பொது மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அரசு அதிகாரிகள் பலரின் சேவைகள் பல்வேறு அரசு வாரியங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. அரசாணை தொடர்பான வெளிப்பணிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து சம்பந்தப்பட்ட செயலகத் துறைகள் தனி உத்தரவுகளை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: எடப்பாடியின் திடீர் திருப்பம்... அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!!!