
தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீடிப்பது அல்லது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக&n
தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீடிப்பது அல்லது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசிக்க உள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் பலமடங்கு குறைந்திருப்பதால் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுமா அல்லது ஊரடங்கு நிறுத்தப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகள், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை மாலை முக்கிய தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement