தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?



Tamil Nadu corona death count upto date

தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்றுமட்டும் 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

இன்றுமட்டும் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மட்டும் 108 பேர் (அரசு மருத்துவமனை -83, தனியார் மருத்துவமனை - 25) கொரோனாவால் உயிரிழந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 2,08,784 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.