தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள்! மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள்! மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,447 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாளிலிருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்மூலம் இன்று வெளியான தகவல்களின் படி தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,447 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1369 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 67 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9984 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று சற்று ஆறுதல் தரும் வகையில் 5 ஆயிரத்து 524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தேதியில் 45 ஆயிரத்து 135 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.