இளைஞர்களின் வழிகாட்டி, சைலேந்திர பாபு தமிழக டி.ஜி.பி.யாக இன்று பதவி ஏற்கிறார்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

டிஜிபி ஜே.கே. திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு


Sylendra Babu takes over as Tamil Nadu DGP today

டிஜிபி ஜே.கே. திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நேற்று தேர்வு செய்யப்பட்டார். 1987ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தனது 25 வயதில் சைலேந்திர பாபு தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்.பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் முத்திரை பதித்தவர் சைலேந்திரபாபு. கோவை மாநகர காவல் ஆணையராக, 2010-11 ஆம் ஆண்டுகளில் பணியாற்றிய போது, சிறுவர்கள் இருவரை, கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை, என்கவுண்டர் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் சைலேந்திர பாபு.

Sylendra Babu

லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என பணி புரிந்த பல துறைகளில் எல்லாம் தடம் பதித்தார். சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார் சைலேந்திர பாபு. பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றினார். தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக இருந்தவர். ரயில்வே காவல்துறை டிஜிபியாக தற்போது பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில், தமிழ்நாடு டிஜிபியாக உள்ள திரிபாதி இன்றுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக்கொள்கிறார். சைலேந்திரபாபு பன்முக திறமை வாய்ந்தவர்.  ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் அவருக்கு, நிகர் அவரே என பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், தற்போதைய இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார். தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவியேற்கும் சைலேந்திரபாபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.