விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி! தற்கொலைக்கு இதுதான் காரணமா?

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி! தற்கொலைக்கு இதுதான் காரணமா?


Suside

சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சர்க்கரை ஆலை ஊழியர் திருமலை என்பவரின் மகள் நிவேதிதா என்பவர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

suside

இந்நிலையில் நேற்று திடீரென அந்த மாணவி தனது அறையில் தூக்கில் தொடங்கியுள்ளார். இதனை பக்கத்து அறையிலிருந்த பெண் ஒருவர் பார்த்து தான் மற்றவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணையில் ஈடுப்பட்டனர். அவர்கள் வந்து அறையை சோதனை செய்ததில் மூன்று பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதனை வைத்து அந்த மாணவி ஒரு வேலை காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு மற்ற மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.