தீபாவளி பரிசு...! விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணம்...! சற்றுமுன் அறிவித்த முதல்வர் விஜய்..!!!
2025-26ஆம் அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்குவதற்காக ரூ.603.34 கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ.4,000 வரை விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டன் கரும்புக்கு ரூ.4,000 விலை
மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.3,290.50-க்கு மேலாக, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையான ரூ.709.50 சேர்க்கப்படுகிறது. இதனால் தகுதியான விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைக்கும். கரும்பில் சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப ரூ.4,000-க்கும் கூடுதலான விலையும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐயோ... புள்ள! வேடிக்கை பார்த்தபடி சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுவன்! ஷாக் வீடியோ..!!!
விவசாயிகள் தேர்வு செய்து தொகை வழங்க ஏற்பாடு
சிறப்பு ஊக்கத்தொகைக்கு தகுதியான விவசாயிகளைத் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்க்கரைத்துறை இயக்குநரகம் சார்பில் பெறப்பட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்து, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் விவரங்கள் ஒத்திசைவு செய்யப்பட்டு, ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை முதல் DBT முறையில் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சுமார் 90,000 கரும்பு விவசாயிகளுக்கு பலன்
தமிழக அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிறப்பு ஊக்கத்தொகை கிடைப்பது கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் வாய்ப்பை ஏற்படுத்தும்.
மேலும், கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளுக்கும் இந்த நடவடிக்கை உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பில் இருந்து கிடைக்கும் உபபொருட்களின் உற்பத்தியும் இதனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.