சாலையை கடக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்.! வேகமாக வந்து மோதிய கார்..! ஏறி இறங்கிய வேன்.! சோக சம்பவம்.!

சாலையை கடக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்.! வேகமாக வந்து மோதிய கார்..! ஏறி இறங்கிய வேன்.! சோக சம்பவம்.!


sub inspector died in accident

கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சோழியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா. 26 வயது நிரம்பிய இவர் தமிழக டி.ஜி.பி. போலீஸ் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில், இரவு பணிக்காக நேற்று முன்தினம் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு பிரசன்னா நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று உதவி ஆய்வாளர் பிரசன்னா மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட பிரசன்னா சாலையில் விழுந்தார். இதனையடுத்து அதே வழியாக வேகமாக வந்த வேன் ஒன்றும் அவர் மீது ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே உதவி ஆய்வாளர் பிரசன்னா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரசன்னாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.