தமிழகம்

பிப்ரவரி 14 ஒரே இடத்தில் ஒன்று கூடிய மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள்! உண்மையான தேசபக்தி!

Summary:

Students and public sprayed for died army mans

புல்வாமா தாக்குதல் நடைபெற்றதன் முதலாமாண்டு நினைவு தினமான இன்று அந்த சம்பவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் வழியாக பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த போது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஜெய் இ முகமது என்று அழைக்கப்படும் தீவிரவாத குழு நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் பலியாகினர். 

இந்த தீவிரவாதத் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணம் அடைந்தனர். 

இந்தநிலையில், வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். 

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கிவரும் கோலிகிராஸ் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் அணிவகுப்பாக வந்து உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Advertisement