எனக்கு கொரோனா அறிகுறி இருக்கு.! லீவு வேணும்..! தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதிய மாணவன்..!Student wrote leave letter to head master for corono leave

எனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் நீண்ட விடுப்பு வேண்டும் என எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தில் இயக்கிங்கிவரும் அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துவரும் மாணவன் ஒருவன், பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளான். அதில், நான் உங்கள் பள்ளியில் 8 வகுப்பு படிக்கிறேன், தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, எனக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதால் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுத்து கொள்கிறேன்.

மேலும், இதுபோன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என அரசாங்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனவே, நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்வதாகவும், எனது விடுமுறை நாட்களை வருகை நாட்களாக பதிவு செய்துகொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் மாணவன் குறிப்பிட்டுள்ளான்.

மேலும், இந்த கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை அறிந்த பள்ளி நிர்வாகம், மாணவனின் பெற்றோரை அழைத்து விசாரித்ததில், மாணவன் அந்த கடிதத்தை விளையாட்டாக எழுதியது தெரியவந்துள்ளது.