90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
தொடர் இருமல்..! சளியுடன் வந்த இரத்தம்! பெண்ணின் மூக்கிற்குள் இருந்த மர்ம பொருள்! அதிர்ந்த மருத்துவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் பட்டம்மாள் விடுதி என்னும் பகுதியை சேர்ந்தவர் 55 வயது நிரம்பிய புஷ்பம். இவர் கடந்த சில மாதங்களாக வறட்டு இருமல் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருமும் போது இருமலுடன் சேர்ந்து இரத்தம் வர தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து புதுகோட்டை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் புஷ்பம். புஷ்பத்தை சோதித்த மருத்துவர்கள், மூக்குத்தியின் திருகாணி ஒன்று நுரையீரலுக்கு செல்லும் மூச்சுக்குழலில் சென்று அடைத்து கொண்டிருப்பதை கண்டறிந்தனர்.
திருகாணி கழண்டும் மூக்குத்தி கீழே விழாமல் இருந்ததாலும், மூக்கில் இருந்த திருகாணி மூச்சுக்குழல் வழியே நுரைஈரலுக்கு அடியில் சென்றதால் என்ன நடந்தது என்பது புஷ்பத்திற்கு தெரியவில்லை. இதனை அடுத்து, தீவிர ஆலோசனைக்கு பிறகு, அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல், அகநோக்கி வழியாக திருகாணியை அரசு மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
இதுவே தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தால் சுமார் 1.5 லட்சம் வரை செலவு வந்திருக்கும் என்றும், இங்கு இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட நபரின் நுரைஈரலில் தொற்று ஏற்படும் முன்னரே மருத்துவர்களின் சாதுரியமான செயலால் திருகாணி நீக்கப்பட்டு, நோயாளி காப்பாற்றப்பட்டது குறித்து பலரும் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர்.