
டீக்கடையில் இருந்து வீட்டிற்கு பார்சல் வாங்கிச்சென்ற வடையில் முழு பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீக்கடையில் இருந்து வீட்டிற்கு பார்சல் வாங்கிச்சென்ற வடையில் முழு பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்து உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கனகராஜ். இவர் சம்பவத்தன்று நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு அதே கடையில் இருந்து வீட்டிற்கு வடை பார்சல் வாங்கிச்சென்றுள்ளார்.
இதனை அடுத்து வீட்டிற்க்கு சென்று பார்சலை திறந்து பருப்பு வடை ஒன்றை எடுத்து சாப்பிட தொடங்கியபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அவர் பார்சல் வாங்கி சென்ற வடையில் முழு பிளேடு ஒன்று இருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கனகராஜ் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். கனகராஜ் கொடுத்த புகாரை அடுத்து நிலக்கோட்டை தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் என்பவர் குறிப்பிட்ட கடைக்கு சென்று ஆய்வு செய்ததோடு, கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் வைரலானதை அடுத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement