அரசியல் தமிழகம்

சசிகலா விடுதலையான பின்பு ஆட்டத்தை முடிப்பார்.! அடித்து கூறும் மு.க.ஸ்டாலின்.!

Summary:

வரும் 27ஆம் தேதி சசிகலா வெளியே வந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் முடிந்துவிடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. 

இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை என்ற கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மக்கள் கிராம சபை கூட்டததில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை. விவசாயிகள் பிரச்சனையை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.

சசிகலா வெளியே வந்தவுடனே அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும். வரும் 27-ஆம் தேதி சசிகலா வெளியே வரும்போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதால் தான் முதல்வர் டெல்லிக்கு சென்றுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement