கூட்டணி வேறு, கொள்கை வேறு.! பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்.!

கூட்டணி வேறு, கொள்கை வேறு.! பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்.!


stalin meet governor

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அணைத்து கட்சியினரும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாகவே சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். சமீப காலமாக மக்கள் பிரச்சனைகள் மற்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு குரல்கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநரை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதை அடுத்து விரைவில் அந்த 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா? என எதிர்பார்க்கப்படுகிறது. 7 பேர் விடுதலைக்காக குரல் கொடுப்பதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டணி வேறு, கொள்கை வேறு.. என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்திருந்தார். இந்தநிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து மு.க.ஸ்டாலினின் ஆளுநர் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.