மக்களே மறந்துவிடாதீர்கள்.. இன்று ஸ்ரீ ராமநவமி.. இதை கட்டாயம் செய்திடுங்கள்.!

மக்களே மறந்துவிடாதீர்கள்.. இன்று ஸ்ரீ ராமநவமி.. இதை கட்டாயம் செய்திடுங்கள்.!


Sri Rama Navami Tomorrow

ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியில் இந்து மக்கள் விஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றாக கருதப்படும் இராம நவமி நாள் சிறப்பிக்கப்படுகிறது. பண்டைய நாட்காட்டியை பின்பற்றி இராமநவமி மார்ச் - ஏப்ரல் மாதங்களில் வரும். அயோத்தியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த தசரதனின் மூத்த மகன் ஸ்ரீ ராமன் பிறந்த நாளினை கொண்டாடும் பொருட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது. 

Sri Rama

இந்த நாளில் தான் ஸ்ரீ ராமர் - சீதா தேவி ஆகியோரின் திருமணமும் நடைபெற்றது. இராமாயணம் தொடர்பான தகவல்கள் மற்றும் இராமநவமி நாட்களின் குறிப்புக்கள் வால்மீகி இராமாயணத்தின் மூலமாக கடைபிடிக்கப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தை தழுவி எழுதப்பட்ட கம்ப இராமாயணத்திலும் தேதி மாற்றம் என்பது இருக்காது என்பதால், இந்திய அளவில் மக்கள் இராமநவமியை கோலாகலமாக சிறப்பிக்கின்றனர். 

Sri Rama

வடமாநிலங்களில் ராமநவமி 9 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடிடப்படும். பல இடங்களில் இராமாயண நாடகங்கள் நடைபெறும். கோவில்களில் ஸ்ரீ ராமர் - சீதை திருமணங்களும் நடைபெறும். இந்த நாளில் ஸ்ரீ இராமரின் ஆலயத்திற்கு சென்று, அவரை வணங்கினால் நல்லது. அதர்மத்தை அழித்து தர்மத்தை காத்திட விஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் 7-வது அவதாரம் ஆகும்.