Spotify App ஆ? ஆபாச கதை சொல்லும் App ஆ?.. பகீர் ஆடியோக்கள்.. திகீர் கதைகள்.!
தமிழ், இந்தி, மலையாளம் போன்ற பல்வேறு மொழி பாடல்களை கேட்பதற்கு Spotify என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், Spotify செயலியில் ஆபாச கதைகள் சொல்வது போன்ற பதிவுகள் பதிவேற்றப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது. தமிழ் ஆ., கதைகள் என்ற பெயரில் பல்வேறு ஆபாச ஆடியோ உரைகள் பதிவேற்றப்பட்டு இருக்கிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உபயோகம் செய்யும் பாடல்களுக்கான செயலியில், ஆபாச ஆடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மேலைநாட்டு கலாச்சாரத்தின் மோகத்தால் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமூகத்தை சீரழிக்க காத்திருக்கும் கும்பல் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
மேலும், அந்த ஆடியோவின் முடிவில் இது கற்பனை கதை, உண்மையான ஆண்மகனுக்கு ஒரு மனைவி போதும் என்றதுடன் ஆடியோ நிறைவடைகிறது. ஆபாச கதையை சமூக ஊடகத்தில் கூச்சமே இல்லாமல் பதிவு செய்துவிட்டு, இறுதியில் ஒற்றை வரியில் Disclaimer பதிவு போட்டால் எப்படி அது சரியாகும்?.
தமிழ்நாட்டில் சைபர் கிரைம் காவல் துறையினர் பல்வேறு அதிரடி செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் உலாவும் இதுபோன்ற சமூக சீரழிவு விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது போல இருப்பது பெரும் வருத்தத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Advertisement
Advertisement