சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: கோடை விடுமுறையை கொண்டாடணுமா? உடனே புக் பண்ணுங்க!

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: கோடை விடுமுறையை கொண்டாடணுமா? உடனே புக் பண்ணுங்க!


special train for summer

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்படுவதால் பெற்றோர்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கும், வெளி ஊர்களுக்கும் செல்வது வழக்கம். கோடைகால விடுமுறை சமயத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவது மட்டுமில்லாமல் பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைப்பதும் சவாலாக இருக்கும்.

இதனால் கோடை கால சிறப்பு ரயில்கள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படுகின்றன. இந்தநிலையில், ஏப்ரல் 8 முதல் ஜூலை 1 வரை புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

special train

ஏப்ரல் 9 முதல் ஜூலை 2 வரை வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை எழும்பூர் வந்தடையும். இந்தச் சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். 

அதேபோல் கேரளா எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணி செல்வதற்கும், வேளாங்கண்ணியிலிருந்து எர்ணாகுளத்துக்கு செல்வதற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், எர்ணாகுளத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு செல்வதற்கும், ராமேஸ்வரத்திலிருந்து எர்ணாகுளம் செல்வதற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.