போதையின் உச்சம்! யாருக்கும் தெரியாமல் பெற்ற தாயை கொன்று சுடுகாட்டில் புதைத்த மகன்கள்!

போதையின் உச்சம்! யாருக்கும் தெரியாமல் பெற்ற தாயை கொன்று சுடுகாட்டில் புதைத்த மகன்கள்!


sons killed his mom

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்த கணேசன்-சரோஜா தம்பதிக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.சரோஜாவின் கணவர் கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சரோஜாவும், அவரது 2 மகன்களும் வசித்து வந்தனர்.

சரோஜாவின் மகன்கள் இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்தை தருமாறு சரோஜாவிடம் கேட்டுள்ளனர், அவரிடம் வாங்கிய பணத்தை செலவு செய்துவிட்டு, மதுபோதையில் வீட்டுக்கு வந்த விக்னேஷ் மற்றும் அருண்குமார் இருவரும் சரோஜாவிடம் பணம் கேட்டுள்ளனர். ஏற்கனவே கொடுத்த பணத்தை செலவு செய்துவிட்டிர்களே? ஏன் இவ்வாறு பணத்தை அழிக்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.

sons killed mom

இதனால் கோபமடைந்த மகன்கள் இரும்பு கம்பியை கொண்டு சரோஜாவை தாக்கியுள்ளனர். சரோஜா வலியால் கதறி துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். இதனைப்பார்த்து  உஷாரான மகன்கள் இருவரும் தாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பொதுமக்கள் சந்தேகத்தில் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது சூரம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி இருவர் நிற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்ததில், மகன்கள் தாக்கியதால் உயிரிழந்த சரோஜாவை யாருக்கும் தெரியாமல் புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ஈரோடு தாசில்தார் முன்னிலையில் சரோஜாவின் சடலத்தை தோண்டியெடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகன்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.