கடன் சுமையால் மகன் எடுத்த விபரீத முடிவு!. ஊரே சோகத்தில் மூழ்கியது!.

கடன் சுமையால் மகன் எடுத்த விபரீத முடிவு!. ஊரே சோகத்தில் மூழ்கியது!.



son killed his parents and he got suicide

கடன் பிரச்சினையின் காரணமாக டிராவல்ஸ் உரிமையாளர் பெற்றோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் மற்றும் அவரின் மனைவி லட்சுமி. இவர்களுக்கு வைரமுத்து என்ற மகன் உள்ளார். பாலமுருகன் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவரது மகன் வைரமுத்து சொந்தமாக  டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை  நடத்திவந்துள்ளார்.

 இந்நிலையில் வைரமுத்துவின் டிராவல்ஸ் நிறுவனம் ஒழுங்காக செயல்படாமல் நஷ்டத்தில் சென்றுகொண்டிருந்தது. அதனை சரிசெய்ய அவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் நாள் ஆக ஆக அதை கட்ட முடியாமல், கடன் சுமை அதிகம் ஏற்பட்டு  சிரமப்பட்டுள்ளார்.

suicide

 மேலும் கடன் கொடுத்தவர்களும் நாள்தோறும் பணத்தை கேட்க ஆரம்பித்துள்ளார். கடனால் என்ன செய்யப்போகிறோம் என்று பயந்து விரக்தியில் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

 மேலும் தான் இறந்துவிட்டால் பணம் கொடுத்தவர்கள் பெற்றோர்களிடம் திரும்ப கேட்டு சிரம படுத்துவார்கள் என எண்ணி கொடூரமாக தனது பெற்றோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கடன்சுமைக்காக மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.