தற்கொலை செய்து தாய் உயிரிழப்பு.! துக்கம் தாங்காமல் தவித்துவந்த 20 வயது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.! சோக சம்பவம்!!

தற்கொலை செய்து தாய் உயிரிழப்பு.! துக்கம் தாங்காமல் தவித்துவந்த 20 வயது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.! சோக சம்பவம்!!


son-commits-suicide-due-to-mother-dead

உயிரிழந்த தனது அம்மாவை நினைத்து தவித்து வந்த 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண். 20 வயது நிறைந்த அவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாவது ஆண்டு படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் வருணின் அம்மா கடந்த 3 மாதத்திற்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்தார். அம்மாவின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் வருண் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் சில மாதங்களான யாருடனும் பேசாமல், வெளியே செல்லாமல் தனியாகவே இருந்துள்ளார்.  இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனியாக இருந்தபொது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

dead

தொடர்ந்து வீடு திரும்பிய தந்தை சொக்கலிங்கம் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அம்மா இறந்த துக்கம் தாங்கமுடியாமல் வருண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.