கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
மீண்டும்.. மீண்டுமா....? ஆன்லைன் சூதாட்டத்தால் ராணுவ வீரர் தற்கொலை... கதறி அழுத தாய்.!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவரது தற்கொலைக்கான காரணம் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த மணித்துரை என்பவர் 2015 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் பணியிலிருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மணித்துரை தனது தாயாரிடம் செல்போனில் பேசியவாறு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் தெரிய வந்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் நிறைய பணத்தை இழந்துள்ளதாகவும் அதற்காக நிறைய பேரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் தாயாரிடம் கூறியுள்ளார். மேலும் இரண்டு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் நான் இறந்துவிட்டதாக நினைத்துக் கொள். அதுவரை என்னிடம் பேசிக் கொண்டிரு என கூறிவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருக்கிறார் .
இதை கேட்ட அவரது தாயார் கதறி அழுதுள்ளார். ராணுவ வீரரான மணி துறையின் தந்தையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்ட நிலையில் தற்போதைய வரும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் ராணுவ மரியாதை உடன் நடைபெற்றது.