ப்ளீஸ் மா... கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கதறும் சிறுவன்! ஏனென்று பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!

ப்ளீஸ் மா... கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கதறும் சிறுவன்! ஏனென்று பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!


Small boy pleased her mother for doing homework

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் அசுர வேகத்தில் பரவி நாளுக்குநாள் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனோவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், அவர்களது கல்வி நலன்களை கருத்தில் கொண்டு பல மாநிலங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆனால் இத்தகைய வகுப்புகளில், வகுப்பறைகளில் படிப்பது போன்று மாணவர்களால் ஆர்வம் காட்ட முடியவில்லை. மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டு பாடங்களை செய்து முடிக்கவைக்கவே பெற்றோர்கள் பெரும் பாடுபடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு சிறுவன் ஒருவன்  இரண்டு நாட்களாக வீட்டுப்பாடம் செய்யாத நிலையில்,  அவரை கண்டிக்கும் தாயிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி சிறுவன் கதறி அழுதவாறு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா என தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.