குழந்தையின் தொப்புள் வழியாக வெளியேறிய மலம்..! நம்பிக்கை இழந்த ஏழை தந்தை..! கடவுள்போல் உதவிய மாவட்ட ஆட்சியர்.!



sivagangai-district-collector-helps-poor-baby

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஏழை பெற்றோர் ஒருவரின் குழந்தையை காப்பாற்ற அம்மாவட்ட ஆட்சியர் உதவி செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் மாரி (28). மாரிக்கும் திவ்யா(22) என்ற பெண்ணிற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகள் பிறந்த சில மணிநேரத்தில் ஒருகுழந்தை இறந்துவிட்டது.

உயிருடன் இருந்த மற்றொரு குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உயிருடன் இருந்த மற்றொரு குழந்தையின் தொப்புள் மூலம் மலம் வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Mysterious

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளன்னர். கூலி தொழிலாளியான மாரி தனியார் மருத்துவமனை சென்று சுமார் 1 லட்சம் வரை செலவு செய்தும் எந்த பலனும் இல்லை.

குழந்தையை காப்பாற்ற மேலும் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்ததால், கூலி வேலை செய்யும் மாரி வேறு வழியின்றி குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்கள் மூலம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனே குழந்தையின் பெற்றோரை சந்தித்த அவர் குழந்தையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த ஊரடங்கு சமயத்திலும் ஏழை பெற்றோரின் கவலையை கருத்தில் கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.