உலகம்

இன்று நடக்க இருக்கும் சிங்கப்பூர் தேர்தல்! இவர்தான் பிரதமராக வேண்டும்! சிங்கப்பூர் தமிழர்கள் பிரார்த்தனை!

Summary:

singapoure tamilns pray for singapoure election

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் கடந்த மாதம் உத்தரவிட்டதை அடுத்து, புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ ஸீன் லூங் கொரோனா பேரிடரை எவ்வாறு கையாண்டார் என்பது குறித்த முடிவை அந்நாட்டு மக்கள் இன்று நிர்ணயிக்க உள்ளனர்.

இந்தநிலையில், இன்று நடக்க இருக்கும் சிங்கப்பூர் 10.7.2020 தேர்தலில் லீ ஸீன் லூங்  மீண்டும் ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் பலர் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். 

இனம், மதம், மொழி,கடந்து ஒற்றுமையாக சுமார் மூன்று லட்சம் வெளிநாட்டு ஊழியர்கள் வாழும் அந்த அழகான சிங்கப்பூர் நாட்டில், கொரோனா வைரஸ் கால கட்டத்தில் உலக பொருளாதாரம் சரிவடையும் இக்கட்டான சூழ்நிலையில்  இந்த நாட்டின் சேவை பிரமிக்க வைக்கிறது என்று சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் கூறுகின்றனர். 

சிங்கப்பூரில் வாழும் அணைத்து நாட்டு ஊழியர்களுக்கும், மாத சம்பளம்(BASIC), 3 வேளை சாப்பாடு , மினரல் வாட்டர்.பழங்கள், பிஸ்கட், உடல் வெப்ப நிலை அறியும் கருவி, கிருமி நாசினி, முககவசம், ஆடைகள், சோப்பு, ஷாம்பூ, பற்பொடி, சேவிங் செட், இன்டர்நெட் சேவை இலவசம் இவை அனைத்தையும் இலவசமாக அளித்தது சிங்கப்பூர் அரசாங்கம்.
 
மேலும், கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச உயர்தராமான சிகிச்சை இவை அனைத்தையும் வழங்கி உதவி செய்த சிங்கப்பூர் நாட்டின் பிரதமர்  லீ ஸீன் லூங் அவர்களுக்கும்,  இரவு பகல் பாராமல் கீழ் பணி 
புரியும் அனைத்து மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள். எங்கள் உயிர்உள்ள வரை உங்களை மறக்க மாட்டோம் இந்த நன்றியினை. இந்தமுறையும் நீங்கள் தான் பிரதமராக வேண்டும் என விரும்புகிறோம் என சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் இணையத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.
 


Advertisement