தமிழகம்

3 வயதில் ராஜாவாக பொறுப்பேற்றவர்..! தமிழகத்தின் சிங்கம்பட்டி கடைசி ஜமீன் காலமானார்..!

Summary:

Singampatti Jameen passes away

தமிழகத்தில் இருந்த கடைசி ஜமீனான, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

இந்தியா மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, நாம் வெற்றிபெற்ற பிறகு மன்னர் ஆட்சி கலைக்கப்பட்டு இந்தியா குடியரசு நாடாக உருவானது. ஆட்சியாளர்களை மக்களே தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டது.

அன்றில் இருந்து மன்னர் ஆட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் பெற்ற கடைசி மன்னராக இருந்தவர்தான் இந்த முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்துவந்த இவர் நேற்று இயற்கை எய்தினார்.

வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவின் காரணமாக அவதிப்படுவந்த மன்னர் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவரது வீட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.

இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாகவே, இவரது தந்தை இறந்துவிட்டநிலையில் இவருக்கு 3 வயதிலேயே ராஜாவாக மூடிசூட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement