தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த சின்னத்தம்பி!! மீண்டும் கெத்தாக புறப்பட்டது!!

sinathambi elephant again going to forest


sinathambi elephant again going to forest


கோவை மாவட்டம் சின்னத்தடாகம், பெரிய தடாகம் வனப்பகுதியில் சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய 2 காட்டுயானைகள் ஆறு மாதங்களாக சுற்றித்திரிந்து விவசாய நிலங்களை பெரிதும் சேதப்படுத்தி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்ட நிலையில், காட்டு யானைகளை பிடிக்க விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

 இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அப்போது லாரியில் ஏற்றும் போது சின்னத் தம்பியின் தந்தங்கள் உடைந்தது. மேலும், கும்கி யானைகள் குத்தியதில் அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

sinathambi

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றப்பட்ட  சின்னதம்பி யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை, டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது.

கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் சின்னத்தம்பி யானை மன  உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விரைவில் எவ்வித பாதிப்புமின்றி கும்கி யானையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.

sinathambi

இதனையடுத்து சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவதாக கூறியதால், பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளைப்பியது. மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, 

இந்தநிலையில் உடுமலைப்பேட்டை கிருஷ்ணாபுரம் குட்டையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சின்னத்தம்பியை, கரும்பு துண்டுகளை காட்டி அழைத்து வந்த வனத்துறையினர், அதற்கு லாரியில் கொண்டு வந்த தண்ணீரை கொடுத்து தாகம் தீர்த்தனர்.

இந்தநிலையில் ஜாலியாக துதிக்கியை கோர்த்துக் கொண்டு  அங்கிருந்து விடைபெற்ற சின்னத்தம்பி மீண்டும் குட்டையை நோக்கி பயணித்தது. அசம்பாவிதம் எதுவும் நடந்து விடாமல் தடுக்க, சின்ன தம்பியின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.