Kallakurichi News: மருமகளின் தலை வெட்டி கொலை.. மாமியார் வெறிச்செயல்.. தமிழகத்தில் படுபயங்கரம்.!



Shocking Murder in Kallakurichi: Woman Beheaded by Mother-in-Law

இரண்டாவது மருமகளின் மீது ஆத்திரம் கொண்ட மாமியார், மருமகளுக்கு செய்த படுபயங்கர சம்பவம் தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் இருந்துள்ளது. இந்த சம்பவம் சங்கராபுரத்தில் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், வளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி. இவருக்கு திருமணம் முடிந்து, கணவர் உடல்நலம் சரியில்லாமல் இயற்கை எய்திவிட்டார். இதனிடையே, குடும்பத்துடன் வசித்து வந்த நந்தினி, சங்கராபுரம் அருகேயுள்ள வீரியூர் கிராமத்தில் வசித்து வரும் மரியா ரொசாரியோ என்ற நபரிடம் பழகி இருக்கிறார். இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டு பழகியுள்ளனர்.

திருமணத்தால் தகராறு:

பின் இவர்கள் திருமணம் செய்துகொண்டு வேறொரு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்தும் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே, மகனுக்கு திருமணம் நடந்ததும், அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம் என்ற செய்தியை அறிந்த மரியாவின் தாய் கிறிஸ்துவ மேரி, தனது மகனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மேரி, அவரது மகன் & மருமகள் இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: எலும்புக்கூடாக 2 வயது குழந்தை.. உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கொன்று வீசிய தாய்.. மதுரையில் கோரம்.!

Crime

சாங்கியம் செய்ய அழைத்து சம்பவம்:

இதனிடையே, மருமகளுக்கு சாங்கியம் செய்ய அழைத்து செல்வதாக மகனிடம் கூறிய தாய், 2 நாட்களாக வீடு திரும்பவில்லை. நந்தினி குறித்து மரியா கேட்டும் உரிய பதில் இல்லை. இதனால் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் அதிகாரிகள் கிறிஸ்துவ மேரியை அழைத்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியாகியது. மருமகளை கொலை செய்து தலையை துண்டித்து ஆற்றங்கரையோரம் புதைத்ததாக கூறியுள்ளார். 

உண்மையை அறிந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: Tiruvannamalai News: கள்ளக்காதல் ஜோடியை உயிருடன் கொளுத்திய பயங்கரம்.. குடிசை வீட்டில் கரிக்கட்டையான சோகம்.!