Tiruvannamalai News: கள்ளக்காதல் ஜோடியை உயிருடன் கொளுத்திய பயங்கரம்.. குடிசை வீட்டில் கரிக்கட்டையான சோகம்.!
கள்ளக்காதல் ஜோடி குடிசை வீட்டில் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், பக்கிரிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவை கடந்த 4 ஆண்டுகளாக 2 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஜவ்வாதுமலை அடிவார பகுதியில் வசித்து வந்த அமிர்தம் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல் ஜோடி டூ கணவன்-மனைவி குடித்தனம்:
இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் அமிர்தம் தனது குழந்தைகள் மற்றும் கணவரை பிரிந்து சக்திவேலுடன் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இவர்கள் சக்திவேல் குத்தகைக்கு எடுத்திருந்த விவசாய நிலத்தில், சிமெண்ட் கல் மற்றும் மேற்கூரை கொண்டு அமைக்கப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவரும் கணவன்-மனைவியாக இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
எரிந்து சாம்பலாகினர்:
கடந்த புத்தாண்டு நாளில் இருவரின் வீடும் தீப்பற்றி எரிந்த நிலையில், வீட்டின் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்ததால் தப்பிக்க முடியவில்லை. இதனால் இருவரின் உடல்களும் வீட்டுக்குள் எரிந்து சாம்பலாகியது. மறுநாள் காலை கறவை மாட்டுக்கு பால் கறக்கச் சென்ற நபர், வீடு எரிந்து சாம்பலாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் செங்கம் காவல்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அதிகாரிகள் விசாரணை:
பின் இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.