AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"இதுக்காகவா கல்யாணம் பண்ணினோம்..." அம்மாவுடன் சென்ற காதல் மனைவி.!! இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!!
தேனி மாவட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சித்தார்பட்டியை சேர்ந்தவர் பிரதாப். 23 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிரதாப், அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கநாயகி என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது. இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரெங்கநாயகியின் தாயார், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரதாப்பிற்கு எதிராக புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் ரெங்கநாயகி தனது தாயாருடன் சமரசம் செய்து கொண்டு காதல் கணவனை விட்டுவிட்டு அம்மாவுடன் சென்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரதாப் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பிரதாபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வாழ்வே மாயம்... ரூம் போட்டு தற்கொலை.!! புது மாப்பிளைக்கு நேர்ந்த சோக முடிவு.!!
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசையாக திருமணம் செய்து கொண்ட காதலி தனது தாயுடன் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் பிரதாப் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "காதல் படுத்தும் பாடு..." 60 வயது முதியவர், இளம் பெண் தற்கொலை.!! காவல் துறை விசாரணை.!!