அதிர்ச்சி..லியோ படம் பார்க்க திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்.. போலீஸிடம் சிக்கியது எப்படி..?



shocking-how-did-the-boys-who-were-involved-in-the-thef

கும்பகோணம் பெருமாண்டி, கணபதி நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளர். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் காலை வீட்டை பூட்டி விட்டு தன் கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது  பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சண்முகசுந்தரம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் வேறொரு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6 ஆயிரம் மற்றும் ஐந்து கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதனால் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த 2திருட்டு சம்பவங்களிலும் ஒரே திருட்டு கும்பல் தான் ஈடுபட்டிருக்க கூடும் என்று காவல் துறையினர் சந்தேகப்பட்டு விசாரணையை தொடர்ந்தனர்.

Theft incident

இதனைதொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் 2சிறுவர்கள் வீடுகளை நோட்டமிடுவதும் ஆள் இல்லாத வீட்டின் சுவர் ஏறி குதித்ததும் பதிவாகி உள்ளது. மேலும் அந்த சிசிடிவி காட்சிகளில் வரும் சிறுவர்களின் முகத்தை அடையாளம் கண்ட போலிசார் இருவரையும் கைது செய்தனர். 

இந்நிலையில் அந்த 2 சிறுவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தேட்டரில் லியோ படம் பார்க்கவும், தீபாவளிக்கு புத்தாடை மற்றும் வெடி வாங்குவதற்காகவும் திருடினோம் என்று சிறுவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சிறுவர்களிடம் இருந்து பணம் மற்றும் 5 கிராம் நகையை மீட்ட போலிசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.