'அயோ அப்பா.. அப்பா.. நாய் கடிக்கிது' வீட்டு வாசலில் அலறிய சிறுமி.. திருப்பூரில் ஷாக்.. பதறவைக்கும் காட்சிகள்.!
சிறுமியை நாய் கடித்ததால் பெற்றோர் பரிதவித்துப்போயினர்.
வாசலில் விளையாட்டு:
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காங்கேயம் சாலை, வி.ஜி.பி கார்டன் குடியிருப்பு பகுதியில் குடும்பம் வசித்து வருகிறது. இந்த வீட்டில் சிறுமி ஒருவர் இருக்கும் நிலையில், இவர் சம்பவத்தன்று காலை நேரத்தில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: ஓடும் பேருந்தில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. சம்பவ இடத்திலேயே சோகம்..!
மருத்துவமனையில் அனுமதி:
அப்போது, தெருநாய் ஒன்று சிறுமியை திடீரென துரத்தி கடித்து இருக்கிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், நாயை விரட்டி விட்டுள்ளனர். பின் சிறுமியை உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Dog Pic: File
அபயக்குரல்:
இதனிடையே, சிறுமியை நாய் கடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், சிறுமியை நாய் கடித்ததும், சிறுமி வலியால் தந்தையை அழைத்து அபயக்குரல் இடும் பதறவைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. திருப்பூரில் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பதறவைக்கும் காட்சிகள்:
வீடியோ நன்றி: பாலிமர்
இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!